Posted by : Unknown Monday, May 27, 2013


சாதாரணமான சமூக வலையமைப்புகளிலிருந்து விலகி வித்தியாசமாய் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் எனும் சிந்தனை ஒடியோ நிறுவனத்திற்கு வந்தது.  அதற்காக அந்த நிறுவனம் முக்கியமான நிர்வாகிகள், வல்லுநர்களுடன் ஒரு விவாதத்தை நிகழ்த்தியது.
அங்கு அலசப்பட்டட பல்வேறு விஷயங்களில் ஜேக் டார்சி என்பவருடைய வித்தியாசமான சிந்தனைதான் டுவிட்டர் உருவாகக் காரணம்.

மொபைலில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது போல இணையத்தில் குறுஞ்செய்திகளால் ஒரு இணையதளம் உருவாக்கினால் என்ன?
என்பதுதான் அந்த மில்லயன் டாலர் சிந்தனை விதை. அதன் வளர்ச்சி பெற்ற வடிவம்தான் இன்று 100 மில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களால் கொண்டாடப்படும் டுவிட்டர்.  முதலில் ஐந்து இலக்க வார்த்தையான twttr என்று அழைக்கப்பட்டு பின்னர் அது டுவிட்டரானது(Twitter)..



  • இந்தத் தளத்தில் இருப்பவர்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடரலாம் என்பது இதில் சறப்பு அம்சம்.
  • ஒருவர் பத்துப்பேரைத் தொடர்கிறார் என்றால் அந்தப் பத்துப் பேர் அனுப்பும் குறுஞ்செய்திகளும் இவருடைய தளத்தில் விழுந்து கொண்டே இருக்கும்.
  •  விருப்பப்பட்டால் இவர் அதற்குப் பதிலளிக்கலாம்.. 

நம்ம ஊர் நடிகர்கள் முதல் ஒபாமா வரையிலான பெரும்பாலான சினிமா, அரசியல் பிரபலங்கள் இன்று டுவிட்டரில் கலந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.. பெரும்பாலான பத்திரிகைகள் இன்றைக்குப் பிரபலங்களின் டுவிட்டர் செய்தியை வைத்தே பல செய்திகளை உருவாக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மொபைல் மூலமாகவே டுவிட்டரில் செய்திகளை அனுப்பலாம் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.



  • 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி முதல் டுவிட் (குறுஞ்செய்தி) அனுப்பி சோதனை செய்யப்பட்டது.  
  • அதே ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி இது பொது பயன்பாட்டுக்கு வந்தது. வினாடி ஒன்றுக்கு 750 குறுஞ்செய்திகள் இதில் அனுப்பப்படுகிறது. 
  • அதாவது ஒரு நாளைக்கு 65 மில்லியன் குறுஞ்செய்திகள்! 
  • ஒரு சின்ன சிந்தனையைச் செயலாக்கி அந்த நிறுவனம் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 
  • ஆண்டுக்கு 150 மில்லியன் டாலர்களாம்..!!


பலவித ட்விட்டர் icon கள் உங்களுக்காக...


twitter icon



twitter icon


twitter icon


twitter icon


twitter icon



twitter icon

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -