Posted by : Unknown Monday, May 27, 2013

Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக வழங்கி மனம் மகிழ செய்யுங்கள்.

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இனி உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தைப் பாருங்கள்.


TuxPaint தரவிறக்க

சரி குழந்தைகளுக்கு விளையாட்டு மட்டும் போதுமா? படிக்க வேண்டாமா? என கேட்பவர்களுக்கும், எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் கணக்கு பாடம் மட்டும் புரிவதே இல்லை என யோசிக்கும் பெற்றோர்களுக்கும் வரபிராசதமாக அமைகிறது TuxMath எனும் ஒரு இலவச மென்பொருள்.


 இது கணித பாடத்தை விளையாட்டாய் கற்றுக் கொடுக்கும் சுவாரசியமான மென்பொருள்
கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் என பல வகையான வசதிகள்.
இது ஒரு ஸ்பேஸ் விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டு ஸ்கோர்களும் வழங்கப்படுவதால், குழந்தைகளை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றவாறு, கணித ஸ்கில்லை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் நெகடிவ் மற்றும் பாஸிடிவ் எண்களின் கூட்டல், கழித்தலும் உண்டு.
தரவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை உற்சாகப் படுத்துங்கள்!





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -