Posted by : Unknown Monday, May 27, 2013



கேள்வி: ஏறத்தாழ பதினைந்து பாஸ்வேர்ட்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வரும் நாம், இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?

பதில்:
 ஏன் இல்லை? இனிமேல் இந்த பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இவை திருடப்படுமோ, காணாமல் (நம் நினைவைவிட்டு) போய்விடுமோ என்ற கவலையே கொள்ள வேண்டியதில்லை. உங்கள் கை விரல் ரேகையினை பாஸ்வேர்ட் ஆகக் கொண்டு, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள விரல் ரேகை ஸ்கேனர் மூலம் உருவாகும் விரல் ரேகைகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தலாம். அடுத்ததாக, கீ போட்டு பின் பாஸ்வேர்ட் போட்டு பயன்படுத்தும் வசதி உருவாகி உள்ளது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிளாஷ் டிரைவ் போன்ற ஒரு சாதனம், அதற்கான தனி குறியீடுடன் கிடைக்கும். ஏதேனும் புரோகிராம் அதற்கான பாஸ்வேர்டைக் கேட்கையில், இந்த பிளாஷ் டிரைவினைச் செருகிப் பின் பாஸ்வேர்டை என்டர் செய்து பயன்படுத்த வேண்டும்.
இன்னொரு புதுவகை பாஸ்வேர்ட் பழக்கம் வர இருக்கிறது. தற்போது சில மொபைல் போன்களில் உள்ளதாக என் நண்பர்கள் கூறி உள்ளனர். ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதில் நீங்கள் பேட்டர்ன் அல்லது இமேஜ் ஒன்றை விரல்களால் வரைய வேண்டும். இது ஏற்கனவே சேவ் செய்யப்பட்ட இமேஜ் உடன் இணைந்து போனால், மொபைல் போனைப் பயன்படுத்தலாம். இல்லையேல் சிரமம் தான். மேலே சொன்ன அனைத்து வகை பாஸ்வேர்ட்களையும் வருங்காலக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகம் இல்லை.

கேள்வி: கம்ப்யூட்டரில் உள்ள சில டாகுமெண்ட் பைல்களைத் திறந்து பார்க்க டிரைவிற்குச் சென்றால், டாகுமெண்ட் பெயருக்கு முன் டில்டே யுடன் ஒரு டாலர் (நு$) அடையாளம் உள்ளது. பைல் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் இடத்தில் இவை உள்ளன. இந்த பைல்கள் எதனைக் குறிக்கின்றன?

பதில்:
 இது ஒரு தற்காலிக பைல்; நீங்கள் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கையில் இது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் டைப் செய்தவை எல்லாம் சேவ் செய்யப்படுவதற்கு முன், இந்த பைலில் தான் வைக்கப்படும். சில வேளைகளில் இந்த பைல் சிஸ்டத்திலேயே சில காலம் தங்கி இருக்கும். அல்லது நீங்கள் டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் கிராஷ் ஆனால், இந்த பைல் அப்படியே இருக்கும். ஒரிஜினல் பைலும் இருக்கும். இந்த தற்காலிக பைலை, அதற்கான ஒரிஜினல் பைலை சேவ் செய்து மூடிய நிலையில் அழித்துவிடலாம்.

கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் காட்சி காட்டிக் கொண்டிருக்கையில், ரைட் மவுஸ் பட்டனில் தவறுதலாக அழுத்திவிட்டால், தேவையில்லாமல் மெனு காட்டப்படுகிறது. இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழி உள்ளதா?
 பதில்:  இது போன்று பல வேளைகளில் நானும் சிந்தித்துள்ளேன். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சி விளக்கத்தில் இது போல மெனுக்கள் தோன்றி நம் உற்சாகத்தைக் கெடுக்கும். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. இந்த மெனு தோன்றுவதை நிறுத்தி வைக்கலாம். Tools  மெனு செல்லவும். அதில்Options என்ற சாய்ஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் Slide show பிரிவிற்குச் செல்லவும். இங்கு'Popup menu on right mouse click'  என்ற ஆப்ஷன் கிடைக்கும். இங்கு உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி ரைட் கிளிக் செய்தாலும் மெனு கிடைக்காது. மீண்டும் தேவைப்படும்போது டிக் அடையாளத்தை அமைக்கவும்.
உங்களிடம் பவர்பாய்ண்ட் 2007 இருந்தால், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பவர்பாய்ண்ட் ஆப்ஷன்ஸ்(Powerpoint Options) என்னும் பட்டன் மீது தட்டவும். இங்கு கிடைக்கும் பிரிவுகளில் அட்வான்ஸ்டு(Advanced)  என்ற கேடகிரியைப் பெறவும். இதில் ஸ்லைட் ÷ஷா என்னும் பிரிவு கிடைக்கும். இங்கு'Show menu on right mouse click'  என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் மேலே சொன்னபடி டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி உங்களை எரிச்சலடையச் செய்திடும் மெனு வராது.

\கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அதிக தகவல்கள் உள்ளன. இதனால் பிரிண்ட் எடுக்கையில் தகவல்கள் பிரித்து கிடைக்கின்றன. எனக்கு அத்தகவல்கள் மேற்புறம், பின் அதன் கீழ் உள்ளது என்ற வரிசையில் வேண்டும். வலது பக்கம் உள்ளது இறுதியில்தான் வேண்டும். இதனை செட் செய்திட முடியுமா?
 பதில்: பல பக்கங்களை உடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். இப்போது அவற்றை பிரிண்ட் எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு வரிசையில் மட்டுமே எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். அவ்வாறு உங்கள் விருப்பப்படி அச்சடிக்க முடியுமா? 
எக்ஸெல் தொகுப்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் அச்சடிக்க வழி தருகிறது. நீங்கள் ஒர்க்ஷீட்டில் தந்துள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் அச்சடிக்கும் வகையில் இல்லாமல் இருந்தால் எக்ஸெல் அதில் உள்ள தகவல்களை, நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசை எல்லைகளில் பிரித்து வைத்து, அடுத்த பக்கங்களாக அச்சிடுகிறது. இந்த வரிசையினை நீங்கள் கட்டுப்படுத்தலாம். 
எடுத்துக்காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்கள் அதிக அகலத்திலும், அதிக உயரத்திலும் அமைந்திருப் பதாக வைத்துக் கொள்வோம். பிரிண்ட் ஆகும்போது இது நான்கு பக்கங்களில் அமையலாம். முதல் பக்கத்தில் அச்சிடப் படுவது எப்போதும் இடது பக்கத்தில் மேல் மூலையில் உள்ள செல்லாக இருக்கும். இப்போது நம் பிரச்னை, இரண்டாவது பக்கத்தில், கீழாக உள்ள தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? அல்லது வலது பக்கம் உள்ள கூடுதல் தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? என்பதுதான். இதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.
 
1. Page Setup பிரிவினை File மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.இப்போது எக்ஸெல் Page Setup டயலாக் பாக்ஸைத் தரும். 
 
2. இதில் Sheet டேப் தேர்ந்தெடுங்கள். 
 
3. இதில் Page Orderஎன்னும் பிரிவில், எக்ஸெல் எந்த வரிசையில் தகவல்களை அச்சடிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் இதில் உங்கள் விருப்பத்தினை அமைக்கையிலேயே, எக்ஸெல் உங்கள் பிரிண்டிங் எந்த வகையில் அமைந்திடும் எனக் காட்டும். 
4. விருப்பங்களை அமைத்த பின்னர் OK  கிளிக் செய்து வெளியேறவும். 
இனி நீங்கள் செட் செய்தபடி பிரிண்ட் கிடைக்கும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கையில், ஒர்க் ஷீட்டின் செல் அகலம் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. என்னுடைய வேலைக்கு இவை சிறியதாக உள்ளன. எப்போது ஒரு ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும், இந்த அகலம் நான் விரும்பும் வகையில் அமைய வேண்டும். எப்படி இதனை செட் செய்வது?

பதில்: புதிய ஒர்க் ஷீட் ஒன்றைத் திறக்கையில் செல் அகலம் ஒரே மாதிரியான அளவிலேயே இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற Format மெனு சென்று இணிடூதட்ண என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு துணை மெனுவினைக் காட்டும். இதில் Standard  என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Standard Width என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் எந்த அகலத்தில் செல்கள் அமைய வேண்டுமோ அதனை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இவ்வாறு செய்தவுடன் உங்கள் ஒர்க் ஷீட்டின் செல்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்படும். ஆனால் இதற்கு முன் நீங்கள் ஏதேனும் ஒரு செல்லின் அகலத்தினை நீங்களாக மாற்றி வைத்திருந்தால், அது அப்படியே அதே அகலத்தில் இருக்கும்

கேள்வி : சில கீகளை மட்டும் ஏன் டாகிள் கீ என்று சொல்கிறோம். அதன் தன்மையை வைத்தா? அல்லது வேறு சிறப்பு பணி அந்த கீகளுக்கு உள்ளதா?

பதில்: சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock)போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lockகீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ(Toggle Key) என அழைக்கிறோம்.


கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் உள்ள ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை எப்படிக் கொண்டுவந்து இயக்குவது? வழக்கமானவற்றில் இருந்து இது மாறுபட்டு இருப்பதாகப் படித்தேன். விளக்கவும்.

பதில்:
 ஆம், விண்டோஸ் 7 இயக்கத்தில் இது சற்று மேம்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. ஸ்டார்ட் அழுத்திப் பின் சர்ச் பாக்ஸில் ணிண்டு என டைப் செய்து என்டர் அழுத்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும். இதில் வலது மூலையில் உள்ள பல கீகளில் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு நியூமெரிக் கீ போர்டினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். ஒலியை இயக்கலாம், நிறுத்தலாம். விண்டோஸ் இயக்கம் தொடங்கும் போதே, இந்த கீ போர்டினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும் வகையில் செட் செய்திடலாம். இன்னொன்று தெரியுமா! மவுஸ் கர்சரைக் கீகள் மீது கொண்டு சென்று கிளிக் செய்து டெக்ஸ்ட்டை அமைக்கலாம்.

கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று திட்டமிடுகிறேன். இதற்கான வழிகளைத் தயவு செய்து கூறவும்.–ஆ. மா. சிவக்கண்ணு, பொள்ளாச்சி
 
பதில்: கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில்Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.  Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின்,  Apply  என்பதில் கிளிக் செய்திடவும். 
இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம். ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம். 
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை. ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதித்தேன். இப்போது விண்டோஸ் 7 வைத்துள்ளேன். இதில் எப்படி கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்குவது?

பதில்:
 நல்ல கேள்வி. புது வீட்டில் குடி புகுந்தால் எழும் சந்தேகங்கள் போல இது உள்ளது. விண்டோஸ் 7ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Start அழுத்தி, கிடைக்கும் சர்ச் பாக்ஸில் "Guest Account"  என டைப் செய்திடவும். அதன் பின்னர் என்டர் அழுத்தவும். இப்போது Manage Accounts என்ற விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதில் கிடைக்கும் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில் Turn On  என்பதில் கிளிக் செய்திடவும். உடனேயே நீங்கள் விரும்பிய வகையில் கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதனை நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம். இந்த அக்கவுண்ட் இருக்க வேண்டாம் எனில், மேலே கூறியதை மாற்றிச் செயல்படவும்.

கேள்வி: ஒருமுறை பயர்பாக்ஸ் தொகுப்பில் உள்ள ஸ்பெல் செக் வசதி குறித்து எழுதி இருந்தீர்கள். என் கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரில் இது செயல்படுகிறது. ஆனால் பல நண்பர்களின் கம்ப்யூட்டரில் இது செயல்படுவதில்லை. இது எதனால்? மாற்று வழி உண்டா?
 
பதில்: நீங்களும், உங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பதிப்பு குறித்த தகவல்களைத் தரவில்லை. இருப்பினும் அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்பெல் செக் வசதியினைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்று குறித்து அறிய நேரிட்டது. இதன் பெயர் Spellbound.  இந்த ஆட் ஆன் தொகுப்பினை இணைத்துவிட்டால், படிவங்களில் நாம் தகவல்களை நிரப்புகையிலும், டெக்ஸ்ட் அமைக்கும்போதும் என அனைத்து இடங்களிலும் ஸ்பெல்லிங் செக் செய்து திருத்துகிறது. தவற்றினைச் சுட்டிக் காட்டுகையில், வண்ணம் மற்றும் போல்டு வகை மாற்றிக் காட்டும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools>Addons எனச் சென்று Get Addons டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Browse All Addons என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Mozilla Addons தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சர்ச் பாக்ஸில் Spellbound என டைப் செய்து தேடினால் இது இருப்பது தெரியவரும். பின்னர் Add to Firefox என்பதில் கிளிக் செய்து, அது கேட்கும் தகவல்களைத் தந்து முடிக்கவும்.

கேள்வி: என் நிறுவனத்தில் பெரிய அளவில் ஒர்க்ஷீட் தயாரிக்கிறோம். இதில் குறிப்பிட்ட செல்லுக்கு அடிக்கடி சென்று கணக்கிட வேண்டியுள்ளது. திரையில் இது தெரியவில்லை என்பதால், அதற்குச் செல்ல அதிக நேரம் ஆகிறது. ஏதேனும் சுருக்கு வழி உள்ளதா?

பதில்:
திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? – இதுதான் உங்கள் கேள்வி, இல்லையா! இதற்கு Edit மெனு சென்று அதில் Go Toஅழுத்தலாம். அல்லது F5 கீ அழுத்தலாம். இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To  பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.

கேள்வி: மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ இரண்டு திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?

பதில்:
 மானிட்டர் திரையின் நீள, அகலம் பொறுத்து இந்த பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை www.freecommander. com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -