Posted by :
Unknown
Monday, May 27, 2013
ட்ரைவ்கெயில் என்ற பெயரில் பெட்ரோலை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த ஐடியா கொடுக்கும் புதிய அப்ளிக்கேஷனை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
டிரைவ்கெயின் என்ற அப்ளிக்கேஷன் மூலம், அதிக மைலேஜ் பெறுவதற்காக என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து ஆடியோ மற்றும் வீடியோ தகவல்களை இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் பெறலாம்.
ஒவ்வொரு வாகனத்தையும் கையாளுவதற்கென்று சில விதி முறைகள் இருக்கின்றது. ஒவ்வொரு வாகனத்தின் என்ஜினும் வித்தியாசப்படுகிறது.
அந்த என்ஜினுக்கு தகுந்த வகையில் வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் வாகனத்தை ஓட்டுவது ஒரு பெரிய கலை என்று தான் சொல்ல வேண்டும்.
வாகனங்களை கையாளும் விதம் தெரிந்து அதை ஓட்டினால் இதன் மூலம் பெட்ரோல் அதிகம் செலவாவதை குறைக்க முடியும். இதற்கு ஐபோனில் உள்ள டிரைவ்கெயின் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஐபோன் திரையில் வசதியை பயன்படுத்தி, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் வாகனங்களை ஓட்டும் பொழுது எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பது போன்ற விவரங்களை தகவல்களாக பெற முடியும்.
வரலாறு காணாத இந்த விலை உயர்வு நாடு முழுவதும் மக்களிடம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க எலக்ட்ரானிக் சாதன உலகம் பெரிதும் உதவி வருகின்றது என்று சொல்லலாம்.
இந்நிலையில் பெட்ரோலின் விலையை குறைக்க போராட்டம் நடத்துவதைவிட இதை எப்படி மிச்சப்படுத்துவது என்பதை யோசிப்பது தான் சிறந்த வழியாக இருக்கும். இதற்கு புதிய யுக்தியை கொடுத்துள்ளது ஆப்பிள் ஐபோன்.
இந்த டிரைவ்கெயின் அப்ளிக்கேஷன் ஹாலாந்தில் வெளியிடப்பட்டு, மக்களிடையே சிறப்பான வரவேற்பினையும் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்த அப்ளிக்கேஷன் வெளியிட உள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அடுத்து பிற நாடுகளிலும் இந்த புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாம். அப்ப இந்தியாவுக்கு…?