Posted by :
Unknown
Monday, May 27, 2013
ஏதோ புடவை, பேன்ட், சட்டையைப் போல இனி காரையும் மடித்து சிறிதாக்கி வைக்கலாம். ஆம், நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கும் அதன் தொல்லை பிடித்த பார்க்கிங் ஏரியாக்களுக்கும் ஏற்றபடி ஒரு வாமன வாகனத்தை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறது ஹிரிக்கோ என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம். வாகன ஓட்டுனர்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்கள் புன்னகையோடு ஓட்டிச் செல்லும்படி வாகன வடிவமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உருவானதுதான் ஹிரிக்கோ. வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் பலரும் இணைந்த கூட்டமைப்பான இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மற்றும் ஒரே வாகனம் இதுதான். அதனால்தான் இந்தக் குட்டிக் காருக்கு ஹிரிக்கோ என்ற அந்நிறுவனத்தில் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் கார், பேட்டரியில் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை ஓடும். எந்த பேட்டரி காரும் எட்ட முடியாதபடி, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக டிரைவர் ஒரு பட்டனைத் தட்டினால் ஐந்தரை அடி நீளமே உள்ள இந்தக் கார் இரண்டாக மடிந்து, சுருங்கி, ஒரு டூவீலரின் பார்க்கிங் ஏரியாவுக்குள் அடங்கிவிடுகிறது. இன்று நாம் பயன் படுத்தும் சாதாரண கார் ஒன்றை நிறுத்தும் இடத்தில் இந்தக் கார்கள் மூன்றை நிறுத்த முடியுமாம்.
மேலும் இந்தக் காரை அப்படியே பக்கவாட்டில் 60 டிகிரி கோணத்தில் திருப்பி ஓட்ட முடியும். இதனால் முன்னும் பின்னும் பம்பர் இடிக்கும் அளவுக்கு கச்சிதமாக இடமிருந்தால் கூட, அங்கு சுலபமாக பார்க் செய்ய முடியும். சில இடங்களில் காரை நிறுத்த மட்டும் இடமிருக்கும். ஆனால் நிறுத்திய பின் கதவைத் திறந்து வெளிவர முடியாது. அந்த அளவுக்கு அருகருகே கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே இந்த கார் ஒரு சிறு கணினியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் காரை நகர்த்தலாம். நாம் வெளியே நின்று கொண்டு ஸ்மார்ட் போன் மூலமாக இதை எந்த பொந்துக்குள்ளும் பார்க் செய்து வெளியேவும் எடுத்துவிட முடியும்.
நகரச் சூழலுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கார் இன்றைய பொல்யூஷனை மட்டுமல்ல. டென்ஷனையும் குறைக்கும்! என்கிறார்கள் இதன் உற்பத்தியாளர்கள். அடிப்படையில், கேம்பிரிட்ஜ் எம்.ஐ.டி மீடியா லேப் ஆராய்ச்சியாளர்களின் ஐடியாதான் இந்த ஹிரிக்கோ கார். அதற்கு மேலும் பல மெருகுகள் சேர்த்து இப்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் ஹிரிக்கோ நிறுவனம், ஆரம்பத்தில் இதன் விலையை 16,400 அமெரிக்க டாலர் என நிர்ணயித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒன்பதே கால் லட்சம் காரை விட அதற்கு பார்க்கிங் ஏரியா கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் இது ஒரு விலையா என்ன!