Posted by :
Unknown
Monday, May 27, 2013
உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன் மென்பொருள், அதிநவீன கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது. மேலும், ஜெல்லிபீன் மென்பொருளானது வேகமாக செயல்படும் திறன் கொண்டது என்றும், குரல் தேடல் போன்ற புதிய வசதிகளை கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக சர்ஃபேஸ் டேப்லெட்டுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்ட நெக்சஸ் 7 டேப்லெட்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.